திருப்பத்தூரில் லேடீஸ் ஹாஸ்டல் ஜன்னலில் யாருங்க அது? கண்ணு மட்டும் தெரியுது? திகைத்து நின்ற பெண்கள்
திருப்பத்தூர் : திருச்சி பரபரப்பே இன்னும் முடிவடையாத நிலையில், திருப்பத்தூரில் பகீர் சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள். என்ன நடந்தது திருப்பத்தூரில்?
கடந்த 2 நாட்களாகவே திருச்சி என்.ஐ.டி. ஹாஸ்டல் விவகாரம் பரபரத்துவிட்டது. என்.ஐ.டி. காலேஜ் ஹாஸ்டலில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர் கைது செய்யப்பட்டார்.. இதற்கு உரிய பாதுகாப்பு கேட்டு மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியிருந்தனர்.

ஒப்பந்த பணியாளர்கள் : ஒப்பந்த பணியாளர் கதிரேசன், மாணவி ஒருவரின் ரூமுக்குள் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்து மாணவி, அலறியபடியே வெளியே ஓடி வந்து நடந்தது குறித்து சக மாணவ மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.. புகார் அளிக்க மாணவிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், தன்னுடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் மாணவியின் பெற்றோர், திருவெறும்பூர் மகளிர் போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் கதிரேசன் கைதானார்..
பணியாளர்கள்: எனினும், ஹாஸ்டல் வார்டன், இன்சார்ஜ், என யாரும் இல்லாமல் அந்த ஒப்பந்தப் பணியாளர் ரூமுக்குள் சென்றது எப்படி? என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த சம்பவத்தை பற்றி வார்டனிடம் சொன்னதற்கு, "அந்த மாணவியை பார்த்து இப்படி உடைகளை அணிந்தால் அப்படித்தான் ஆகும்" என்றும் சொல்லியிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இறுதியில், ஹாஸ்டல் கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்டபிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பி சென்றார்கள்.. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பெண்கள் விடுதியில் ஆண்கள் பணியில் ஈடுபடும்போது விடுதி வார்டன் அருகே இருக்க வேண்டும்" என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருப்பது பலரது கவனம் பெற்று வருகிறது. இப்படி திருச்சி பரபரப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், திருப்பத்தூரிலும் ஒரு கேவலம் நடந்துள்ளது..
திருப்பத்தூர்: திருப்பத்தூரில், ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது.. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்..
இந்த பகுதியில் பெட்ரிக் என்பவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.. இவர் திடீரென ஹாஸ்டலின் ஜன்னல் வழியாக, மாணவிகள் அறையை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது.
மாணவிகள்: ஜன்னலில் திடீரென ஆண் உருவம் தெரிந்ததும், மாணவிகள் அலறி கூச்சலிட்டுள்ளனர்.. பிறகு இதுகுறித்து உடனடியாக ஹாஸ்டல் வார்டனிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.. உடனே ஹாஸ்டல் வார்டனும் இதுகுறித்து புகார் அளித்தார்.. இந்த புகாரின்பேரில் பெட்ரிக்கை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு பக்கத்திலேயே, கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருக்கிறாராம் பெட்ரிக்.. புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்த பெட்ரிக்குக்கு 38 வயதாகிறது.. கடந்த 10 தினங்களுக்கு முன்பு ஹாஸ்டலில், மாணவிகள் ரூம் ஜன்னலை எட்டிப் பார்த்துள்ளார்... மாணவிகள் அப்போதே கத்திக்கூச்சல் போடவும், பெட்ரிக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதற்கு பிறகுதான், ஹாஸ்டல் வார்டனிடம் பெட்ரிக்கின் அடையாளத்தை மாணவிகள் சொல்லி உள்ளனர்.
கோரிக்கை: நாளுக்கு நாள் பெண்கள் ஹாஸ்டலில் இப்படியான சம்பவங்கள் நடப்பது மாணவிகளையும், பெற்றோரையும், கவலைக்குள்ளாக்கி வருகிறது. எனவே, விடுதிகளில் கூடுதல் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் தலைதூக்கி வருகின்றன.












Click it and Unblock the Notifications