வளர்த்த தாயின் மறைவுக்கு கூட வராமல் கூவத்தூரில் கும்மாளம் அடித்த திருப்பூர் எம்எல்ஏ
வளர்த்து ஆளாக்கிய வளர்ப்புத் தாயின் இறப்புக்கூடு வராமால் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏவை மக்கள் வலைதளங்களில் கிழித்து வருகின்றனர்.
சென்னை: திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் வளர்த்த தாயின் இறப்புக்கு கூட வராமல் கூவத்தூரிலேயே இருந்துள்ளார். அவரை சமூக வலைதளங்களில் மக்கள் கழுவிகழுவி ஊற்றி வருகின்றனர்.
திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏவான விஜயகுமாரின் தாயார் அவரது இரண்டு வயதிலேயே உயிரிழந்து விட்டார். இதையடுத்து அவரது தந்தை அங்காத்தாள் என்பவரை இரண்டாவத திருமணம் செய்து கொண்டார்.
கொடூரம் :-/ pic.twitter.com/uSjn6xrMU0
— டான் டான் டான் (@krajesh4u) February 18, 2017
அங்காத்தாள் தான் விஜயகுமாரையும் அவரது சகோதரர்களையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அங்கத்தாள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அப்போது சசிகலா தரப்பின் பிடியில் கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் வராததால் அவரது சகோதரர்களே இறுதிச் சடங்குகளை செய்தனர்.
அடுத்த நாளாவது எம்எல்ஏ விஜயகுமார் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இதுவரை வரவில்லை. பதவி வெறிப்பிடித்துள்ள சசிகலா தரப்பு தாயாரின் சாவுக்குக் கூட எம்எல்ஏ விஜயகுமாரை அனுப்பாமல் அடைத்து வைத்திருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வளர்த்த தாயின் மரணத்துக்குக் கூட வராமல் உள்ள விஜயகுமாருக்கு மக்கள் வாட்சப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications