திருவண்ணாமலை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்புப் பணிகள் தீவிரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று 160 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தவறி விழுந்த குழந்தையின் பெயர் சுஜித். துரை - ஜெயலட்சுமி என்ற தம்பதியரின் மகன் ஆவான்.
திருவண்ணாமலை அருகே கலசம்பாக்கத்தையடுத்து உள்ள கிடாம்பாளையம் என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
160 அடி ஆழ கிணறு
குழந்தை சுஜித் விழுந்துள்ள ஆள்துளை கிணறு அமைந்துள்ள இடம் ஜெயபால் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த ஆழ்துளை கிணறு 160 அடி ஆழம் உடையது என்றும், குழந்தை சுமார் 40 அடி ஆழத்தில் சிக்கி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை தீவிரம்
தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டுள்ள நிலையில், இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீட்பு பணிக்காக விரைந்து வந்துள்ளனர்.
பள்ளம் தோண்டி மீட்க முயற்சி
குழந்தை விழுந்துள்ள இடத்தின் அருகே பக்கவாட்டில் பள்ளம் தோண்டுவதற்காக ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு பள்ளம் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை மயக்கமடைந்துவிடாமல் இருப்பதற்காக குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
ரோபோடிக் குழு விரைவு
இதனிடையே இதுபோன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற மதுரையை சேர்ந்த ரோபோட்டிக் எந்திரம் வைத்துள்ள மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்துகொண்டிருப்பதாக தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சங்கரன்கோவில் சிறுவன்
நேற்றுதான் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.
விழுப்புரம் சிறுமி
அதற்கு சில தினங்களுக்கு முன்னர், அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதியன்று விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.
தொடரும் சம்பவங்கள்
10 தினங்களுக்குள் தமிழகத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அலட்சிய நிகழ்வுகள்
அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள், அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications