திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அரோகரா முழக்கமிட்ட பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீப திருவிழாவை முன்னிட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்ட உடன் பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர்.
பஞ்ச பூதங்களில் நெருப்பு தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலைதான். நினைத்தாலே முக்தி தருவது இந்த திருத்தலம் தான்.
கார்த்திகை தீபத் திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதிகாலையில் பரணி தீபம்
10ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பரணி தீபம் கோவிலில் ஏற்றப்பட்டது.
வேத மந்திரங்கள் முழுங்க பரணி தீபத்தை சிவாச்சாரியர்கள் ஏற்றினர் இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அரோகரா முழக்கமிட்டு அருணாசலேசுவரரை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கிரிவலம்
தீபத்திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

எங்கும் பக்தர்கள் கூட்டம்
கார்த்திகைதீப திருவிழாவை முன்னிட்டு கிராமங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்திருப்பதால் திருவண்ணாமலையில் உள்ள மடங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
அனைவரும் மகாதீபம் ஏற்றப்படுவதைக் காண குவிந்துள்ளனர்.

பக்தர்கள் தரிசனம்
மலை மீது மகாதீபம் ஏற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அர்த்தநாரீஸ்வரர் கோவில் கொடி மரத்தின் முன்பு எழுந்து காட்சியளித்தார். கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருநாளன்று மட்டுமே அருள்மிகு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுடன் இணைந்து, அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவது வழக்கம். அர்த்தநாரீஸ்வரரை, கோயில் முன்பு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்

மகாதீபத்தை தரிசித்த பக்தர்கள்
மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை எட்டியது. மலை மீது தீபம் ஏற்றப்பட்ட உடன் ஏராளமானோர் தங்களின் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். மலைமீது ஏற்றப்பட்ட தீபம் 11 நாட்களுக்கு எரிந்து கொண்டிருக்கும். இதனை பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications