எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர வேண்டும்..மொட்டை போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய மதுகுடிப்போர் சங்கம்
'நீரா' என்ற பெயரில் பனை, கள்ளு, இறக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுக்குடிப்போர் சங்கம் முடிகாணிக்கை செலுத்தி நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி, வடபழனி முருகன் கோயிலில் முடி காணிக்கை செலுத்தி வேண்டுதல் நிறைவேற்றியுள்ளனர் தமிழ்நாடு மதுக்குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர்.
இதுதொடர்பாக மிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகளையும், தமிழக மண்வளத்தையும் காத்திடும் வகையில் சிறு கனிம வளத்துறையின் மூலம், விவசாயிகள் ஆறு, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து விவசாய நிலத்தை வளமாக்கிட ஆணையிட்டதற்காகவும், 'நீரா' என்ற பெயரில் பனை, கள்ளு, இறக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

40 ஆண்டுகளாக கருணாநிதி, ஜெயலலிதாவால் தடை செய்யபட்ட ஏரி, குளங்களில் கோடை காலங்களில் லண்டல் மண்ணை எடுத்துச் சென்று விவசாய நிலங்களில் போடுவதால் விவசாய நிலங்கள் உரமிகுந்த இயற்கை விவசாயம் செழிப்பாக இருந்தது. ஆனால் 40 ஆண்டுகளாக கருணாநிதி, ஜெயலலிதா ஏரி குளங்களில் மண் எடுக்க தடை போட்டதால் கெமிக்கல் உரங்கள் போட்டு மண்ணை உரமேற்றியதால் இயற்கை விவசாயம் அழிந்து போனது.
இத்தகைய நிலையை போக்கிட விவசாயிகளுக்கு தேவையான உரமிக்க ஏரி குளத்து மண்ணை அள்ளி செல்ல ஆணையிட்டுள்ளார். அதற்காகத்தான் இவருடை நல்ல திட்டங்கள் மேலும் வளர வடபழனி முருகனிடம் வேண்டி முடி காணிக்கை செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications