தமிழகத்தில் 2 நாட்களில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட்: ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா
சென்னை : தமிழகத்தில் 2 நாட்களில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா கூறியுள்ளார்.
ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும் அவற்றை டிசம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கடந்த 8ம் தேதி மோடி அறிவித்தார்.

ஒருநாள் விடுமுறைக்குப் பின்னர் நவம்பர் 10ம் தேதி வங்கிகள் திறக்கப்பட்டன. வங்கி திறந்த உடனேயே பணத்தை மாற்றவும், டெபாசிட் செய்யவும் மக்கள் குவிந்தனர்.
வங்கிகளில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வங்கிகளில் விநியோகிக்கப்பட்டு வருவதால் மக்கள் நீண்ட வரிசையில் வங்கிகளில் காத்திருந்து தங்கள் பணத்தை மாற்றிச் செல்கின்றனர்.
ஏடிஎம்களில் ரூ.4000, வங்கிகளில் ரூ.10000க்கு மேல் பணத்தை எடுக்க முடியாது என்பதால் பலர் தங்கள் பணத்தை டெபாசிட் செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 2 நாளில் மட்டும் ரூ.1,300 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் தென்மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மட்டும் ரூ.1,300 கோடிக்கு பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர். வங்கிகளில் மாற்றப்பட்ட பழைய நோட்டுக்கள் எவ்வளவு என்பது வரும் 14ம் தேதி தெரியும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் புழக்கத்தில் உள்ள 2,300 கோடி அளவிலான பழைய நோட்டுக்கள் அழிக்கப்படும் என்றும் சதக்கத்துல்லா கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications