முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரிலிருந்து சிவப்பு சுழல் விளக்கு திடீர் அகற்றம்.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரிலிருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி விவரம்: தமிழகத்திலுள் உயர் அதிகாரிகள் கார்களில் பொருத்தப்பட்டுள்ள சுழல் விளக்குகள் அகற்றப்பட உள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலேயே அவர் பயணித்த காலத்திலேயே சிவப்பு சுழல் விளக்குகளை பயன்படுத்துவது கிடையாது. தற்போது பிரதமர் காரில் கூட சுழல் விளக்கு அகற்றப்படுகிறது. இந்த சூழலில் நானும் இன்றையிலிருந்து எனது காரில் சுழல் விளக்கை அகற்றுகிறேன்.

மத்திய அரசு அறிவுரை
மத்திய அரசின் அறிவுரைப்படி, மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் காரிலிருந்து சுழல் விளக்கை அகற்ற வேண்டும். எனவே அதையேற்று நானும் சுழல் விளக்கை அகற்றியுள்ளேன் என்றார்.

நழுவிய முதல்வர்
அதிமுக அணிகள் நடுவேயான இணைப்பு பற்றி நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "இது அரசு சம்மந்தப்பட்ட பிரஸ் மீட். எனவே வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது" என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினை
மேலும் அவர் கூறுகையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடக்கின்றன. இப்போது கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு அந்த பணிகளும் நடைபெறுகின்றன.

ஏரிகள், குளங்கள்
ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுவதற்காக குடிமராமத்து பணிகள் நடக்கிறது. குடி மராமத்து பணிகளுக்காக கூடுதலாக ரூ.90 கோடி ஒதுக்கியுள்ளேன். புரட்சி தலைவி 'அம்மா' ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications