ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலில் தனித்து போட்டி: ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் 'தைரியம்'!
மதுரை: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ''ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மதித்து தாமதமின்றி மத்திய, மாநில அரசுகள் சட்ட நடவடிக்கை எடுத்து வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடைபெற வழி செய்ய வேண்டும் என்றார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் வற்புறுத்தலால் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இதுபோன்ற விளையாட்டுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஆட்சியில் அமர்ந்து 6 மாதங்களுக்கு மேலாகியும், தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்ற மோடி தலைமையிலான பா.ஜ.க. நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின் பேரில் சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பிரித்தாழும் சூழ்ச்சியை கடைபிடிக்கின்றனர்.
ராஜபக்சே போல சர்வாதிகாரியாக வலம் வரலாம் என மோடி நினைக்கிறார். அப்படி நினைத்தால், ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட முடிவு தான் அவருக்கும் ஏற்படும்.
தமிழக அரசின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன. லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ராஜபாளையத்தில் 15க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் காய்ச்சலால் பலியாகி உள்ளனர். போர்க்கால அடிப்படையில் கொசுக்களையும், அவற்றால் ஏற்படும் நோய்களையும் மாநில அரசு ஒழிக்க வேண்டும்.
ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மேம்படுத்த ரூ.165 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. அந்த நிதியை பயன்படுத்தி சிமெண்ட் ஆலை உற்பத்தி திறனை 1,500 டன் ஆக உயர்த்த வேண்டும். மாறாக, அந்த ஆலையை தனியாருக்கு விற்க ஏற்பாடு செய்தால் போராட்டம் நடத்துவோம்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். அப்படி போட்டியிட்டால் தனித்து தான் போட்டியிடுவோம்" என்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
திமுக உடன் கூட்டணி என்றால் பரிசீலிப்போம் என்று கூறிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 24 மணிநேரத்திற்குள் இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்திருப்பது அரசியல் ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுகவிற்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்தி அனைத்து எதிர்கட்சியினரும் ஒன்றினைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications