காவிரியில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு- தமிழகத்தில் மார்ச் 28-ல் முழு அடைப்பு!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதைக் கண்டித்து மார்ச் 28-ந் தேதி தமிழ்நாட்டில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் அண்ணா தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றன.

சென்னை ராயப்பேட்டையில் நடந்த இந்த கூட்டத்துக்கு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். ராஜசேகரன் வரவேற்றார்.

TN farmers, parties calls bandh over Cauvery issue

டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.), பலராமன் (காங்.), வேலு, ஜெயராமன் (பா.ம.க.), ஞானதேசிகன் (த.மா.கா.), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.க.), எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ. (ச.ம.க.), மல்லை சத்யா (ம.தி.மு.க.), பால அருள்செல்வன் எம்.எல்.ஏ. (தே.மு.தி.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), டாக்டர் சேதுராமன் (மூவேந்தர் முன்னணி கழகம்), கலி பூங்குன்றன் (தி.க.), ராஜேந்திரன் (ஐ.ஜே.கே.), புழல் தர்மராஜ் (பெருந்தலைவர் மக்கள் கட்சி), வி.டி.மணி (வர்த்தக சங்கம்), சந்திரசேகரன் (சிவாஜி சமூகநல பேரவை), அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) மற்றும் பல்வேறு தமிழ் இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் புதிய அணைகளை கட்டப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து வரும் 28-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+