வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. சென்னையில் 39.45 லட்சம் வாக்காளர்கள்.. பெண்களே அதிகம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 5,66,81,842 வாக்காளர்கள் இருக்கின்றனர். 1-1-2016 அன்று 18 வயது பூர்த்தியானவர்களும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டதால், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். மேலும் 22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் ஏற்றப்படவுள்ளது. வருகிற 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், திருத்தம் கோரியவர்களுக்கும் அன்று முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

சென்னை
சென்னையில் மாநாகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மாநகர தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இது தொடர்பாக விக்ரம் கபூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 01.01.2016 தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற் கொள்ளுதல் தொடர்பாக பொது மக்களிடம் இருந்து உரிய படிவங்கள் பெறப்பட்டன.

துணைப் பட்டியல்
16.09.2015 முதல் 24.10.2015 முடிய பெறப்பட்ட இந்த விண்ணப் படிவங்களை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்த பின்னர் 2016ம் ஆண்டிற்கான துணைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் பார்வைக்கு
இந்த வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெரிய தொகுதி வேளச்சேரி
இறுதி வாக்காளர் பட்டியலில் 16 தொகுதிகளில் மொத்தம் 39 லட்சத்து 47 ஆயிரத்து 16 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த 16 தொகுதிகளில் வேளச்சேரி தொகுதி அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாக விளங்குகிறது. 15.09.2015 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 28 ஆயிரத்து 773 வாக்காளர்கள் இருந்தனர்.

1.20 லட்சம் புதிய வாக்காளர்கள்
2016ம் ஆண்டு சிறப்பு திருத்தம் தொடர்பாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 744 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 781 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 243 ஆகும். இது 3.9 சதவீதம்.

வாக்காளர் அட்டைகள்
இந்த சுருக்க முறை திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 208 ஆகும். இது வரை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படாத 19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்காளர் அட்டை உடனடியாக வழங்கப்படும்.

25ம் தேதி பெறலாம்
18 மற்றும் 19 வயது பூர்த்தி அடைந்த இறுதி திருத்த பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள் தேசிய வாக்காளர் தினமான வருகிற 25ந் தேதி வாக்குப்பதிவு மையங்களில் வழங்கப்படும்.

சிறப்பு முகாம்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், திருத்தம் செய்ய விரும்புவோருக்காக வருகிற 30 மற்றும் பிப்ரவரி 6 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடக்கும் இந்த முகாமில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களே அதிகம்
சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் உள்ள மொத்த ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 19,62,414 ஆகும். பெண்கள் - 19,83,766 ஆகும். இதரப் பிரிவினர் 836 ஆகும். மொத்த வாக்காளர்கள் 39,47,016 ஆகும். சென்னையில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.

82,000 வாக்குப் பதிவு எந்திரங்கள் தேவை
இந்த நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு 82 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் 8 ஆயிரம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. பீகாரில் இருந்து 50,000 இயந்திரங்களும், குஜராத்திலிருந்து 15,000 இயந்திரங்களும், மகாராஷ்டிரத்திலிருந்து 10,000 இயந்திரங்களும் கொண்டு வரப்பட உள்ளன. இந்த இயந்திரங்களை வாக்குப் பதிவுக்காகத் தயார் செய்யும் பணி, பிப்ரவரி 1 முதல் மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications