5 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக மீனவரை படுகொலை செய்த சிங்கள கடற்படை !
ராமேஸ்வரம்: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை கடற்படை நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்தார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. அத்துடன் மீனவர்களின் வலைகளை அறுத்து, படகுகளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் மீனவர்கள் மிகுந்த அச்சத்துடன் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதுகுறித்து இருநாட்டு அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

அண்மையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று இலங்கை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் சிங்கள கடற்படை தாக்குதல்களை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.
இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய எல்லைக்குள்ளே இலங்கை கடற்படை சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர் பலியாகினார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்தார்.
முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காரைக்காலை சேர்ந்த மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு படுகொலைகள் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவதும் வலைகளை சேதப்படுத்துவதையும் இலங்கை கடற்படை செய்து வந்தது.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளது இலங்கை கடற்படை. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இரவோடு, இரவாக கரைக்கு திரும்பி வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு மத்திய, மாநில அரசு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications