தென்னை மரத்திலிருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய தமிழக அரசு அதிரடி அனுமதி
தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நீராபானத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை: தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் நீராபானத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தென்னை விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக தென்னை மரத்தில் இருந்து நீராபானத்தை இறக்கி பதப்படுத்தி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையேற்று கடந்த ஏப்ரல் அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த கூட்டத்தில், தென்னை வளர்ச்சி வாரியம், தமிழக அரசினால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நீரா உற்பத்தி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து நீரா உற்பத்திக்கு உரிமம் வழங்குவதற்கான விதிகள் அடங்கிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி தென்னை இருந்து நீரா எடுத்து விற்பனை செய்ய, உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய சட்டப்படி முறையான அனுமதியை பெற்றிருக்கும் தேங்காய் உற்பத்தியாளர் நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கங்கள் இதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் மீண்டும் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை உரிமம் வழங்கலாம் என்பதை அரசு முடிவு செய்யும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications