கருணாநிதிக்கு மெரினாவில் இடம்... தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை இதோ...
கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.
சென்னை: கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருணாநிதியின் விருப்பப்படி அவரை அண்ணா சமாதியின் பக்கத்தில் சமாதி அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து திமுக நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு விசாரணை நேற்று இரவு முதல் நடந்து வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனுக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி மறுத்துவிட்டார்.
காமராஜர், பெரியார் உள்ளிட்டோருக்கு மெரினாவில் இடம் இல்லை. அப்படியிருக்கும் போது கருணாநிதிக்கு மட்டும் எப்படி இடம் அளிக்க முடியும் என்று வாதாடினார்.
மேலும் சில உதாரணங்களை எதிர்தரப்பும் முன் வைத்தது. இறுதியில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்க ஹைகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொண்டர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications