என் மீது வழக்குப் போட்டு என்னை பயப்படுத்த தமிழக அரசு நினைக்கிறது : தங்கத்தமிழ்ச்செல்வன்
என் மீது வழக்குப் போட்டு என்னை பயப்படுத்த தமிழக அரசு நினைக்கிறது என்று தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி : என் மீது வழக்குப் போட்டு மிரட்ட தமிழக அரசு நினைக்கிறது. அடுத்து என்னை கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்று அமமுக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக் கூட்டம் தேனியில் நடந்தது. இதில் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், எம் எல் ஏ தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து பேசியதற்காக என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்காக நான் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது செல்லமேஸ்வரர் உட்பட பல நீதிபதிகள் குற்றம்சாட்டியபோது, அவர்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்குத் தொடரவில்லை.
அதே போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் அமைக்காத மத்திய அரசு மீது ஏன் அவமதிப்பு வழக்குத் தொடரவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத தமிழக அரசு மீது ஏன் அவமதிப்பு வழக்குத் தொடரப்படவில்லை.
ஆனால், எம் எல் ஏ இல்லாமல் தொகுதி மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பேசியதற்கு, அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அடுத்து என்னை கைது செய்ய தமிழக அரசு முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications