கருணாநிதி கவலைக்கிடம்... நாளையும் நாளை மறுநாளும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் நாளையும் நாளை மறுநாளும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அரசு மற்றும் திரைத்துறை நிகழ்ச்சிகள் அனைத்தும் நாளை ரத்து
சென்னை: கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கருணாநிதி 11- நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து இன்றைய தினமும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் தகவல்கள் கூறப்பட்டன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து அரசு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகள் நாளையும் நாளை மறுநாளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications