யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் வாழ்த்து!
யுகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் முதல்வர் பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை : யுகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் முதல்வர் பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள யுகாதி வாழ்த்துச் செய்தியில் : யுகாதி பண்டிகையை மகிழ்ச்சிகரமாக, பாரம்பரியமாக கொண்டாடும் வேளையில், நாம் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும், நாம் செய்யும் முயற்சிகள் அனைத்தும் நம் நாட்டின் அமைதிக்காகவும், வலிமைக்காகவும், ஒளிமயமான வளர்ச்சிக்காகவும் உதவ வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

'யுகாதி'' என்னும் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ''யுகாதி'' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள யுகாதி வாழ்த்துச் செய்தியில் : புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகளை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதால், அனைத்து தரப்பு மக்களும் மகிழ்வுடன் வாழும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
பன்னெடுங்காலமாய் தமிழ்நாட்டு மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், மொழியால் வேறுபட்டாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு, தமிழ் மக்களின் நெஞ்சங்களோடு பின்னிப் பிணைந்து, சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் செயலாகும்.
இந்த புதிய புத்தாண்டு, உங்கள் வாழ்வில் அனைத்து நலங்களையும், வளங்களையும், வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்றும் வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications