ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது.. ஆளுநர் பன்வாரிலால் அறிக்கை
மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று நாமக்கல் ஆய்வு பற்றி ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video

சென்னை: மாவட்டங்களில் ஆய்வு செய்ய அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லுக்கு ஆய்வு செய்ய சென்ற ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் செய்தனர். அவரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளை வீசியும், கருப்பு பலூன்களை எறிந்தும் போராடினர். இதையடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிராக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார்..
அவர் தனது அறிக்கையில், மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநருக்கு மாநிலத்தில் ஆய்வு செய்ய அதிகாரம் கிடையாது. அதையும் மீறி ஆய்வு செய்தால் திமுகவின் போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை இரண்டாவது விளக்கம் அளித்துள்ளது.மாவட்டங்களில் ஆய்வு செய்ய அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்ட வல்லுநர் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின், ஆளுநருக்கு ஒரு மாநிலத்தின் எந்த பகுதியிலும் முதல்வரின் அனுமதி இல்லாமல் ஆய்வு செய்ய அதிகாரம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஆளுநரின் செயலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். தமிழக அரசின் செயல்பாட்டை ஆளுநர் விமர்சித்ததில்லை. இது தமிழக அரசுக்கு எதிரான ஆய்வு கிடையாது.
ஏற்கனவே ஆளுநர் அளித்த அறிக்கையில் அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. ஆளுநருக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறி இருந்தார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications