ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி!
ஆளுநர் வித்யாசாகர் ராவை எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வர் பதவியில் இருந்து தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். அத்துடன் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தமக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
சசிகலாவோ தமக்கே அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருக்கிறது; என்னை முதல்வராக்குங்கள் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த சசிகலா ஆளுநரை மிரட்டும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிவந்தார்.

தகர்ந்த கனவு
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதனால் அவரது முதல்வர் பதவி கனவு தகர்ந்தது.

எடப்பாடி தேர்வு- ஓபிஎஸ் நீக்கம்
இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார்.

ஆளுநருக்கு தகவல்
தாம் அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஃபேக்ஸ் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை தரவும் தயார் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
|
உரிமை கோரினார்
இதை ஏற்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநர் வித்யாசாகர் ராவை மாலை 5.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பார். இந்த சந்திப்பின் போது தமக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுத்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications