For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திரா படுகொலை செய்த 20 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ3 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திராவால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

TN govt announces Rs 3 lakh to each of 20 Tamils

திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக கூறி 20 தமிழர்களை ஆந்திரா படுகொலை செய்தது. ஆனால் தமிழர்களை முன்னரே கைது செய்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நேரடி உத்தரவின் பேரிலேயே 20 தமிழரும் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

TN govt announces Rs 3 lakh to each of 20 Tamils

இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழகம், புதுவையில் கடந்த 2 நாட்களாக கொந்தளிப்புடன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய மனித உரிமைகள் ஆணையமும் ஆந்திரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

English summary
TN govt. has announced Rs 3 lakh to each of 20 Tamils who were killed by AP police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X