எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ஜன.17ல் பொது விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு!
எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி ஜனவரி 17-ம்தேதி பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்தநாளையொட்டி ஜனவரி 17- ஆம் தேதிக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் 17ஆம் தேதியன்று வருவதால் பொது அரசு விடுமுறை விட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: எம்.ஜி. ராமசந்திரனின் 100 வது பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகள், அரசு வாரியங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்படும். தனியார் நிறுவனங்கள் ஜனவரி 17 ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 17 ம் தேதி பொது விடுமுறை ஆனதால் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். கடந்த மாதம் டிசம்பர் 6ஆம் தேதி ஜெயலலிதா மறைவினை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பொது விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications