ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க அதிகாரம் உள்ளது: தமிழக அரசு வாதம்
டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. எனவே மாநில அரசுக்கு 7 பேரையும் விடுவிக்க அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி மரணதண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதையடுத்து, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வாகன்வதி, தண்டிக்கப்பட்டவர்கள் மனு அளிக்காமலேயே அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது தவறு என வாதிட்டார்.
மேலும், முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யக்கூடாது என்றும், அரசியல் சாசனப்படி அவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர், 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினோம் என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications