சஸ்பெண்ட் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கு எதிராக கொந்தளிப்பு! இன்று பொதுக்குழுவில் அவசர ஆலோசனை!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரான ஞானதேசிகன், சுரங்கத்துறை ஆணையர் அதுல் ஆணந்த் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் திடீரென ஐஏஎஸ் அதிகாரிகளை நீக்கியிருப்பது எப்படி முறையாகும்? என்று தலைமைச் செயலர் ராம்மோகன் ராவ் மற்றும் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஐஏஎஸ் அதிகாரிகள் கேள்வியும் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக விவாதிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு இன்று கூட உள்ளது.

TN IAS association to meet on suspension of officials

தமிழக மின்சார வாரியத்தின் தலைவராக நீண்டகால பதவி வகித்தவர் ஞானதேசிகன். பின்னர் திடீரென தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.

சட்டசபை தேர்தலின் போது, திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறி அக்கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் பதவியேற்பு விழா இடம் தொடர்பாகவும் விவாதித்தார் ஞானதேசிகன் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்கு முதல் முறையாக வந்தபோது, ஞானதேசிகன் வரக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். அப்போது முதன்மை செயலராக இருந்த ராம்மோகன் ராவ்தான் ஜெயலலிதா முதல் கையெழுத்திடும் கோப்புகளை எடுத்துக் கொடுத்தார்.

பின்னர் சிறிதுகாலம் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த ஞானதேசிகன் எல்காட் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அவருடன் புவியியல், சுரங்கத்துறை ஆணையாளர் அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. சக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கே காலை பேப்பர்களைப் பார்த்துதான் இந்த தகவல் தெரியவந்தது.

ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக விசாரணைகள் நடத்தப்படவும் இல்லையாம். இது இதர ஐஏஎஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக தலைமைச் செயலர் ராம்மோகன் ராவ் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் 20க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஒன்றாக சென்று இது குறித்து முறையிட்டிருக்கின்றனர்.. இப்படி நடவடிக்கை மேற்கொண்டால் எங்கள் பணிக்கு என்ன பாதுகாப்பு? என்றும் அவர்கள் கொந்தளிப்புடன் கேட்டிருக்கின்றனர்.

ஏற்கனவே பல மாதங்களாக 18 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்படவும் இல்லை; மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அசோக் டோங்ரி, தீரஜ்குமாருக்கும் ஆகியோருக்கும் எந்த பொறுப்பு ஒதுக்கீடும் செய்யப்படவும் இல்லை; ஐஏஎஸ் அதிகாரிகளை இப்படி நடத்தினால் அரசு நிர்வாகம் எப்படி இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இதனிடையே 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது. இதில் ஐஏஎஸ் அதிகாரிகளின் சஸ்பெண்ட் விவகாரம், பதவிகள் வழங்கப்படாதது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+