தேர்தலில் பணம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது: மீண்டும் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு
தேர்தலில் பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: தேர்தலில் பணம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது.
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம் என்பது உட்பட ஏராளமான சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் திண்டுக்கல் சீனிவாசன். இந்த நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய சீனிவாசன், சிறைக்கு போனவர்களுக்கு கட்சிப் பதவி வழங்கப்படுகிறது. ஆனால் தேர்தல் களத்தில் பணம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதனால் கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
தேர்தலில் பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications