காங்கிரஸுடன் கூட்டணி வைக்க கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சு: ஜி.கே. வாசன்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் பல கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்துவதாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே நிறுவப்பட்ட மா. சிங்காரவேலரின் முழு உருவ வெண்கல சிலையை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,
மத்திய அரசின் முயற்சியால் மீனவர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இனி வரும் காலத்தில் மீனவர்களுக்கு ஏற்படும் தடைகளை எல்லாம் தகர்ப்போம் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் பல கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இறுதி கட்ட பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்த பிறகு கூட்டணி குறித்து கட்சி மேலிடம் அறிவிப்பு வெளியிடும் என்றார்.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications