பிளஸ் 2 வில் மார்க் குறைந்து விட்டதா? மறு கூட்டலுக்கு உடனே விண்ணப்பிங்க!
பிளஸ் 2வில் மதிப்பெண் குறைந்தவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம், கட்டண விபரங்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. விடைத்தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் செலுத்த வேண்டிய கட்டண விவரத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: பகுதி-1 மொழி ரூ.550,
பகுதி-2 மொழி (ஆங்கிலம்)- ரூ.550,
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.275.
மறுகூட்டல் கட்டணம்:
பகுதி- 1 மொழி,
பகுதி- 2 மொழி (ஆங்கிலம்)
மற்றும் உயிரியல் ஒவ்வொன்றுக்கும் (இருதாள்களும் சேர்த்து)- ரூ.305,
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்)- ரூ.205.

பணம் செலுத்தும் முறை: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்தலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.
விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மே 12ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications