அத இடிச்சா என்ன.. ஆந்திராவில் கட்டுகிறேன் பார் பிரமாண்ட திருமண மண்டபம்.. பலே புள்ளிவிவரத் தலைவர்
சென்னை: புள்ளிவிவரத் தலைவர் ரொம்ப விவரமானவர் போலத்தான் தெரிகிறது. காசே இல்லை என்று கட்சியினரிடம் கஞ்சப்பாட்டு பாடி தேர்தல் நிதி வசூலித்துத் தர வேண்டும் என்று ஸ்டிரிக்ட்டாக கூறி வரும் அவர் ஆந்திரா பக்கம் மிக பிரமாண்டமான திருமண மண்டபம் ஒன்றை பெரும் பொருட் செலவில் சத்தம் போடாமல் கட்டி வருகிறாராம்.
இவரது திருமண மண்டபத்தை மேம்பாலத்திற்காக முன்பு கையகப்படுத்தி இடிக்க முயன்றபோது பெரும் பிரச்சினை செய்தவர் இவர். பின்னர் கையகப்படுத்தியது போக மீதமுள்ள திருமண மண்டபத்தில்தான் இப்போது கட்சி ஆபீஸை நடத்தி வருகிறார்.
கட்சிக்கு நிதி சேர்க்க வேண்டும், தேர்தல் செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியினரிடம் கறாராக கூறுபவரும் கூட.
இந்த நிலையில்தான் தமிழகத்திலிருந்து ஆந்திரா செல்லும் சாலையில் உள்ள ஒரு ஊரில், பல ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் மிக பிரமாண்ட அளவில் திருமண மண்டபம் கட்டியுள்ளாராம்.
இதன் திறப்பு விரைவில் நடைபெற உள்ளதாம். திருமண மண்டபத்தை சத்தம் போடாமல் கட்டியிருந்தாலும் கூட திறப்புவிழாவுக்கு கட்சியினரை அழைத்து முறைப்படி சொல்லும் திட்டம் வைத்திருக்கிறாராம் தலைவர்.
அந்தப் பக்கம் பாலம் கட்ட வழியிருக்கான்னு ஆளுங்கட்சியில் யோசிக்காமல் இருந்தால் சரித்தான்..
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications