Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாண்புமிகு முதல்வர் அவர்களே... காவிரி, முல்லைப் பெரியாறு குறித்துப் பேசுவது சமூக விரோதமா?

தமிழகத்தின் உரிமை பிரச்சனைகளை பேசுவது அனைத்தும் சமூக விரோதம் என முத்திரை குத்த முயற்சிக்கிறது தமிழக அரசு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியின் போது காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சனைகளைப் பேசியது சமூக விரோதம் என முதலில் போலீசார் கூறினர்... இப்போது சட்டசபையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.. ஆக காவிரி, முல்லைப் பெரியாறு, கூடங்குளம் அணு உலை, கெயில், மீத்தேன் எரிவாயு பிரச்சனைகளை பேசுவதெல்லாம் சமூக விரோதம்... இதற்காக போராடுகிற அமைப்புகள் எல்லாம் சமூக விரோத அமைப்புகள் என முத்திரை குத்துகிறதா? தமிழக அரசு என்ற கேள்வி எழுந்துள்ளது...

ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் பண்பாட்டு அடையாளம். இந்த பண்பாட்டு அடையாளத்தை மீட்கத்தான் தன்னெழுச்சியாக தமிழக இளைஞர்கள் போர்க்களத்தில் முதலில் குதித்தனர்.

இதனைத் தொடர்ந்துதான் மாணவர்கள் களத்துக்கு வந்தனர்... தமிழகத்தின் ஒட்டுமொத்த மாணவர்களுமே புரட்சியில் குதித்தனர்...மாணவர்களின் ஒற்றை கோரிக்கையாக ஜல்லிக்கட்டு என்பது மட்டுமே இருக்கவில்லை..

சகிக்க முடியாமல்..

சகிக்க முடியாமல்..

தமிழகத்தின் அத்தனை உரிமை பிரச்சனைகளிலும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இருக்கிறது என்கிற பெருங்கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இந்த தன்னெழுச்சி புரட்சி நிகழ்ந்தது. தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் பல்வேறு குறைகளைப் பொறுத்து வந்து சகிக்க முடியாமல்தான் மாணவ, மாணவியர் தெருவுக்கு வந்தனர் என்பதே உண்மை.

எத்தனை எத்தனை பிரச்சனைகள்

எத்தனை எத்தனை பிரச்சனைகள்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி நீரை திறக்க மறுப்பது, தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகளை கபளீகரம் செய்வதிலேயே தொடர்ந்து முனைப்பு காட்டும் கேரளா, தமிழக விவசாயிகளின் மரணம், மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு என எண்ணிலடங்கா பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்..

பெருவெடிப்பாக..

பெருவெடிப்பாக..

இத்தனை பிரச்சனைகளுக்கும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தேறின... ஆனால் இந்த போராட்ட உணர்வுகளின் ஒட்டுமொத்த பெருவெடிப்பாக நிகழ்ந்ததுதான் மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டம்.

சர்வதேச அரசியல்..

சர்வதேச அரசியல்..

மாணவர்கள் ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டுக்காக களமாட வரவில்லை. ஜல்லிக்கட்டு என்பது பண்பாட்டு அடையாளம்; அந்த உரிமையை மீட்க களத்துக்கு வந்தனர்; காளைமாடு பற்றி மட்டும் பேசிவிட்டுப் போக வந்தவர்கள் அல்ல மாணவர்கள்.. நாட்டு மாடுகளை அழிக்கும் சர்வதேச அரசியலைப் பற்றியும் பேசியவர்கள் தமிழகத்து இளைஞர்கள், மாணவர்கள்.

அடுத்த பாய்ச்சல்

அடுத்த பாய்ச்சல்

இவர்களுக்கு ஆதரவாக அரவணைப்பாக ஒட்டுமொத்தமாக தமிழக பொதுமக்களும் களத்துக்கு வந்தனர்... மாணவர்களின் தன்னெழுச்சியை சற்றும் எதிர்பார்க்காமல் அலட்சியம் காட்டியது நீங்கள்... மத்திய அரசு.. ஆகையால் இந்த போராட்டம் அடுத்த பாய்ச்சலுக்கு நகர்ந்தது.

அடிபணிந்த அரசுகள்

அடிபணிந்த அரசுகள்

ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல... தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி வெகுதீவிரமாக நகர்ந்தது.. இந்த பெருநெருப்பை நீங்கள் எதிர்கொள்ள முடியாது என்பதால் டெல்லிக்கு ஓட வேண்டிய நிலை உருவானது; இறுமாப்பு காட்டிய இந்திய மத்திய அரசு அடிபணிந்தது.

சமூக விரோத முத்திரை

சமூக விரோத முத்திரை

இதன்விளைவாகத்தான் ஜல்லிக்கட்டு மீதான தடை உடைந்தது. இதை சகிக்க முடியாத கோபத்தின் உச்சத்தில்தான் ஜல்லிக்கட்டைத் தவிர காவிரி, முல்லைப் பெரியாறு, பன்னாட்டு குளிர்பானங்கள் தொடர்பாக பேசுவதெல்லாம் சமூக விரோதம்- பேசுகிறவர்கள் சமூக விரோதிகள்; மாணவர் அமைப்புகள், தமிழர் இயக்கங்கள், மீனவர்கள் எல்லோரும் சமூக விரோதிகள் என தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை மக்களை சமூகவிரோதிகளாக கூறி இந்த போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் மீனவர்களை நரவேட்டையாடியது தமிழக போலீஸ்.

போர்க்களம் தொடரும்

போர்க்களம் தொடரும்

போலீஸ் தருகிற அறிக்கைகளை பேசுகிற முதல்வராக சட்டசபையில் பேசியிருக்கிறீர்கள்.. வர்தா புயலின் போதும் ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் மக்கள் உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்புக்கு வேட்டு வைக்கத்தான் போலீஸ் துணையோடு வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டதை என்பதை உணராமல் நீங்களும் காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனையை பேசினாலே சமூக விரோதம் என முத்திரை குத்துவது ஜனநாயக மாண்பை மதித்து நடக்கும் தமிழகத்தை தொடர்ந்தும் போர்க்களமாக்கத்தான் வழிவகுக்குமே என்பதுதான் நிதர்சனம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+