முஸ்லீம்களுக்கு 10% இடஓதுக்கீடு கோரி தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம்
திருச்சி: சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையங்களின் பரிந்துரைப்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் ஷிர்க் ஒழிப்பு (மூடநம்பிக்கை எதிர்ப்பு) மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் முகமது யூசுப் தலைமை வகித்தார். நிறுவனர் ஜெய்னுல் ஆபிதீன், மாநில உயர்நிலைக் குழுத் தலைவர் சம்சுல் லுஹா, செயலாளர்கள் அப்துல் ரகுமான், தொண்டி சிராஜுதீன், தலைவர் அல்தாபி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் தவ்பீக் தீர்மானங்களை வாசித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையங்களின் பரிந்துரைப்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். நாடு முழுவதும் புதிதாக மத்திய பல்கலைக்கழகங்களை சிறுபான்மையினருக்காக ஏற்படுத்த வேண்டும். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய் யும் முடிவைக் கைவிட வேண்டும்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைக ளின்போது பொதுமக்களுக்கு அரசு சலுகைகள் வழங்குவதுபோல, முஸ்லிம் பண்டிகைகளின்போதும் சலுகைகளை வழங்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, வரும் தேர்தலுக்குள் நிறைவேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மூடநம்பிக்கைகளை விளக்கும் வகையில் மாநாட்டுத் திடலில் கண்காட்சியும் நடைபெற்றது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications