For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கிகளில் இன்று மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பணமாற்றம்! பணம் எடுக்கவும் முடியாது!

வங்கிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்றும் ஆனால் ரூபாய் நோட்டுக்களை மாற்ற மூத்த குடிமக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் உள்பட நாடுமுழுவதும் உள்ள வங்கிகள் சனிக்கிழமை வழக்கம் போல செயல்படும் என்றும் ஆனால் 500,1000 ரூபாய் நோட்டுக்களை மூத்த குடிகமக்களுக்கு மட்டுமே மாற்றி அளிக்கப்படும் என்றும் இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ரூ2.5 லட்சத்திற்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள் தங்களது பான் கார்டு எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Today bank function normally but notes exchange services only to senior citizens

இதனிடையே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு 4500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதியவர்களுக்கு மட்டுமே பணம் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் பணம் டெபாசிட் செய்தல்,எடுத்தல் உள்படஇதர வழக்கமான வங்கி பரிவர்த்தனைகள் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

English summary
Today 19th nov.2016 banks have been functioning normally but exchange of specified bank notes of Rs.500 and Rs1000 denomination will be restricted only senior citizens
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X