For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘தமிழகச் சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு’... நாளை கண்டனப் பொதுக்கூட்டம் நடத்துகிறது திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு குறித்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நாளை சென்னையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், ஜெ. அன்பழகன், எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 22-7-2014, செவ்வாய்க்கிழமை, மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற தி.மு. கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கிணங்க; தென்சென்னை மாவட்ட தி.மு.க.வின் சார்பில் 31-7-2014 வியாழன் அன்று மாலை 6 மணியளவில் முத்தமிழறிஞர் கலைஞர் சிறப்புரையாற்றும் "தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு" எனும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை, தியாகராய நகர் பேருந்துநிலையம் அருகில் நடைபெறுகிறது.

இப்பொதுக்கூட்டத்தில் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

English summary
The DMK south Chennai district secretary J.Anbalagan has asked the partymen to gather in large number for the meeting to be held tomorrow in t.nagar, presided by Karunanidhi. The meeting is to condemn the ADMK government's activity in Tamilnadu assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X