ஆர்ப்பரிக்கும் தண்ணீர்... குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை நீடிப்பு
கனமழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஐந்தருவி,பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

குற்றாலம் : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் ஐந்தருவி,பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் மெயினருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 30-ஆம் தேதி முதல் பெய்த கன மழையால் குற்றாலம் மெயினருவி,பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டி வெள்ளமாக மாறியதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் மெயினருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
இதன்காரணமாக அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை. இன்று 3-ஆவது நாளாக காலை வரை அனைத்து அருவிகளிலும் நீடித்தத் தடை பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி ஆகிய இரண்டு அருவிகளிலும் விலக்கி கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து சென்றவண்ணம் உள்ளனர். குற்றாலம் மெயினருவியில் தொடர்ந்து வெள்ளம் கொட்டுவதால் 3 வது நாளாக தடை நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications