குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் சண்முகநாதன்
குற்றாலம்: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கூறியுள்ளார்.
அருவிகளின் நகரமாக விளங்கும் குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடக்க நிகழ்ச்சி கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு, சாரல் விழாவை குத்துவிளக்கு ஏற்றி வைத்து அவர் பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறை முன்னோடி துறையாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழக சுற்றுலாத்துறை, இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்தது. தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது பெருமையாக உள்ளது. அதற்கு காரணம் முதல் அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை தான். 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சுற்றுலாத்துறை அவர் கைவசம் இருந்தது. அதனால் சுற்றுலாத்துறையை பற்றி ஜெயலலிதா நன்கு அறிவார்.

அருவிகள் நிறைந்த நகரமாக விளங்கும் குற்றாலத்துக்கு சீசன் காலங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2011ம் ஆண்டு 33 லட்சம் பேரும், 2012ம் ஆண்டு 50 லட்சம் பேரும், 2013ம் ஆண்டு 70 லட்சம் பேரும், 2014ம் ஆண்டு 95 லட்சத்து 78 ஆயிரம் பேரும் குற்றாலத்துக்கு சீசன் காலங்களில் வந்து சென்றுள்ளனர்.
அதேபோல் கடந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 48 ஆயிரத்து 106 பேர் குற்றாலத்துக்கு வந்து சென்றுள்ளனர். இந்த ஆண்டு சென்னையில் இருந்து குற்றாலத்துக்கு சுற்றுலாத்துறை மூலம் 5 சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் நடவடிக்கையால் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி வருகிறது.வரும் ஆண்டில் குற்றாலத்திற்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications