மாணவர்கள், மீனவர்கள் மீது தாக்குதல்.. கண்டித்து குடியரசு தினத்தன்று கறுப்புக் கொடி பேரணி.. மதுரையில்
மதுரை: கடந்த திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் மாணவர்கள் தாக்கப்பட்டது மற்றும் சென்னையில் மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரையில் போராட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்புகள் இணைந்து மதுரையில் இந்தப் போராட்டத்தை நடத்தியது. மதுரை பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடி ஏந்தி கண்டனப் பேரணியாக புறப்பட்டு ரயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர்.

அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது. போராட்டத்தின் போது, ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை தாக்கிய போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னை நடுகுப்பம் பகுதியில் மீனவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
குடியரசு தினத்தன்று கறுப்புக் கொடி பேரணி நடைபெற்றதால் மதுரையில் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து குடியரசு தினமான இன்று தமிழகம் முழுவதுமே பொதுமக்கள் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் போலீசாரை கண்டித்து ஒதுங்கியே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications