பறை முழங்கி.. மணக்க மணக்க பீப் பிரியாணி சமைத்து உண்டு.. பொதுமக்களுக்கு வழங்கி-தபெதிக தூள் போராட்டம்
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதை கண்டித்து, புதுவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாட்டிறைச்சி பிரியாணி சமைத்து உண்ணும் போராட்டத்தை நடத்தினார்கள்.
புதுச்சேரி: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை என்றாலும் மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சமூக இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மாட்டிறைச்சியை சமைத்து உண்ணும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

மணக்க மணக்க பீப் பிரியாணி
இதற்காக புதுச்சேரி சட்டசபையில் பின்புறம் கூடிய தபெதிகவினர், பெரிய பாத்திரம் வைத்து 25 கிலோ பீப் பிரியாணியை மணக்க மணக்க சமைத்தனர். பின்னர், போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினார்கள்.

பொதுமக்களுக்கு வழங்கி..
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் காண வந்திருந்த பொதுமக்களுக்கு பீப் பிரியாணியை தபெதிகவினர் வழங்கினார்கள். தமிழக பண்பாட்டு கலாச்சாரத்தின் மீதான மத்திய அரசின் தாக்குதலை கடுமையாக எதிர்த்து போராடுவோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மோடியின் வஞ்சக சூழ்ச்சி
இந்தப் போராட்டம் குறித்து தபெதிக துணை தலைவர் இளங்கோவன், பாஜக திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை இந்தியாவில் நிறைவேற்றி வருகிறது. வஞ்சமாக இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ள பாஜகவை கடுமையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications