ஜெ. கூட்டத்துக்கு திருப்பி விடப்படும் பஸ்கள்: மார்க்சிஸ்ட், டிராபிக் ராமசாமி புகார்!
கோவை: ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் திருப்பி விடப்படுவதாக மார்க்சிஸ்ட் கட்சியினரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தலையொட்டி கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த கூட்டங்களில் கட்சியினர், பொதுமக்களை அழைத்து வர கோவையில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சுமார் 200க்கும் அதிகமான அரசு, தனியார் பஸ்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் இன்று இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், கூறியுள்ளதாவது: ''அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம் கோவையில் நடப்பதையொட்டி, இன்று காலை முதல் பல்வேறு வழித்தடங்களிலும் இயக்கப்படும் பேருந்துகளை பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்க்கும் வகையில் திருப்பி விட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக பல்வேறு வழித்தடங்களில் பேருந்துக்கு காத்திருக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
கட்சித்தலைவர்கள் பிரசாரத்திற்காக போக்குவரத்தை மாற்றி விடுவதும், தனியார் பேருந்துகளை பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்க்க திருப்பி விடுவதும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது ஆகும். எனவே அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்களுக்கு போக்குவரத்து ஒரே சீராக பயன்படுத்தவும், வழிதடத்தை மாற்றி அனுப்ப உத்தரவிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.
டிராபிக் ராமசாமி புகார்
இதேபோல், மக்கள் பாதுகாப்புக் கழகத்தலைவர் டிராபிக் ராமசாமியும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ''மக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள், அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு மாற்றி விடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளேன். நடவடிக்கை எடுக்காவிட்டல் வழக்கு தொடருவேன்'' என்றார்.
மனுவினை பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரிகள், மனுவின் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications