போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த கோரிக்கை – ஏப்ரலில் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அரசுடன் நடத்திய 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் 50 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 10 ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பில் 14 பேர் கொண்ட குழுவினரும், தொழிலாளர்கள் தரப்பில் 42 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதில் ஓய்வூதியம், ஊதிய உயர்வு குறித்து பேசப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டம் தங்களுக்கு பலன் அளிக்காது என்றும், 50 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications