5 பேர் கொலையில் சிக்கிய பாட்டி மரணம்!
திருச்சி: திருச்சியில் 5 பேர் கொலையில் தொடர்புடைய வயதான பாட்டி ஒருவர் உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்த வைர வியாபாரி தங்கவேல், அவரது மகன் செல்வகுமார், மகள் சத்யா மற்றும் கிராப்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ், அவரது கார் டிரைவர் சக்திவேல் ஆகியோரைக் கொலை செய்ததாக கடந்த 2013ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜோதிடர் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கொலைகளைச் செய்ய கண்ணனுக்கு உடந்தையாக இருந்ததாக தங்கவேலுவின் மனைவி யமுனா மற்றும் அவரது தாயார் சீதாலட்சுமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீதாலட்சுமிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
சிகிச்சைக்காக சீதாலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் காலமானார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications