"தலைவன் ஸ்டாலின்" வந்துவிட்டார்.. இனி வெற்றிடம் என்ற வெற்று சொல் இல்லை... திருச்சி சிவா
சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இனி வெற்றிடம் இல்லை என திருச்சி சிவா தெரிவித்தார்.
கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பொதுக்குழுவில் வெளியானது.

முன்னதாக பொதுக் குழுவில் கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி சிவா எம்பி கூறுகையில் உணர்ச்சி பெருக்கோடு நாம் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். கவலையை மறப்போம், கண்ணீரை துடைப்போம், கடமையை தொடருவோம் என்று அண்ணா கூறுவார்.
கழகத்தின் தலைவர் ஸ்டாலின் என்று சொல்லும் போது ஒரு புளகாங்கிதம், ஒரு பரவசம், ஒரு மகிழ்ச்சி. ஸ்டாலின் இந்த உயர்வை ஒரே நாள் இரவிலே அவர் எட்டிவிடவில்லை. பொதுவாக நிதானமாக வளர்ச்சி அடைந்தவர்களை ஏணியின் மூலம் வந்தார்கள் என்பார்கள்.
அவர் ஏணியிலேதான் வந்தார். ஆனால் அது மரயேணி அல்ல நூலேணி. இந்த ஏணியில் ஏறுவது எவ்வளவு சிரமம். சூறாவளிகளையும், புயல்களையும் சந்தித்த கடந்த கால அனுபவம் அவருக்கு உண்டு. தமிழகத்தில் வெற்றிடம் என்ற வெற்றுச் சொல்லுக்கு இனிமேல் இடமில்லை என்பதை இன்றைய இந்த பொதுக்குழு நிலைநிறுத்துகிறது என்றார் அவர்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications