பதவியை தக்க வைக்க அமைச்சர்கள் மாற்றி பேசுகின்றனர்.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
பதவியை தக்க வைக்க அமைச்சர்கள் மாற்றி பேசுகின்றனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: பதவியை தக்க வைக்க அமைச்சர்கள் மாற்றி பேசுகின்றனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர்கள் அடிக்கடி மாற்றி பேசுவது மக்களுக்கு தெரியும் என்றார்.

அமைச்சர்கள் மாற்றி, மாற்றி பேசி வருவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பொதுச்செயலாளர் ஒப்புதல் இல்லாமல் அதிமுக பொதுக்குழுவை கூட்ட அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை என டிடிவி திகனரன் கூறியுள்ளார்.
அதிமுக சட்டவிதிப்படி பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்கே அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரையும் நீக்கியிருப்பார்களோ என தோன்றுகிறது என தினகரன் தெரிவித்தார்.
அமைச்சர்களின் தரம் நாளுக்கு நாள் மக்களிடையே குறைந்து வருகிறது என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். தம்பித்துரை உள்ளிட்டோர் தான் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். தம்பிதுரை டெல்லிக்கே செல்லாமல் போயஸ் கார்டனில் தான் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா படம் இடம்பெயராமல் போனதற்கு நான் காரணமில்லை என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ மட்டும் அல்ல இன்டர்போல் விசாரிக்கவும் நாங்கள் தயார் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications