முதல்வரை மாற்ற ஆளுநரிடம் வலியுறுத்தினோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ் செல்வன்
சென்னை : அதிமுக அரசின் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரிடம் மனு அளிக்கவில்லை என்றும் முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று கடிதம் அளித்துள்ளதாகவும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் கூறியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஒரு கடிதத்தை அளித்துள்ளனர். இது குறித்து எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் கூறியதாவது:
ஓ.பன்னீர்செல்வம் எங்களை எதிர்த்து போனவர், இரட்டை இலையை முடக்கினார். அதிமுக அரசை ஊழல் ஆட்சி என்று சொன்னவருக்கு ஏன் துணை முதல்வர்.

பசி பட்டினியோடு...
கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றுவதாக சொல்வதாக இருந்தால் எதற்காக ஊழல் ஆட்சி என்று சொன்னார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா சொன்னதைக் கேட்டு நாங்கள் பசிப் பட்டினியோடு 122 எம்எல்ஏக்கள் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால் எங்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது.
Recommended Video


அவர்கள்தான் இணைந்துள்ளனர்
நாங்கள் அதிமுக அணி எங்களின் பொதுச்செயலாளர் சசிகலா. துணை பொதுச்செயலாளர் தினகரன், எங்களுடன் வந்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சேர்ந்திருக்கிறது.

ஆலோசிக்கவில்லை
எங்களுடன் தான் அவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள், இது தான் எங்களின் நிலைப்பாடு. அணிகளை இணைப்பதாக முடிவெடுத்த முதல்வர் பழனிசாமி அதற்காக நாங்கள் அவருக்கு அளித்த வாக்குகளை மறந்து எங்களை கலந்து ஆலோசிக்காமல் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்.

முதல்வரை மாற்ற வேண்டும்
முதல்வர் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை என்னவானது. முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் முன் வைத்துள்ளோம். அது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உறுதியளித்துள்ளதாகவும் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications