ஆர்.கே.நகரில் விசிலடிக்கும் தினகரனின் குக்கர்... ராஜநாயகத்தின் 2வது சர்வே முடிவு
ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்துக்கே மக்கள் ஆதரவு உள்ளதாக. பேராசிரியர் ராஜநாயகத்தின் இரண்டாவது கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்திற்கான வேட்பாளரையே மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்வதாக பேராசிரியர் ராஜநாயகத்தின் இரண்டாவது கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மையம் கடந்த 13ம் தேதி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் டி.டி.வி தினகரனுக்கு அதிகம் ஆதரவு இருப்பதாக இருந்தது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் ஆளும்கட்சி உட்பட அனைத்து வேட்பாளர்களும் கலக்கத்தில் இருந்தனர்.

இந்நிலையில், பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வு மைய அமைப்பு தனது இரண்டாவது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இந்த இரண்டாவது கருத்துக்கணிப்பு டிசம்பர் 13 முதல் 17ம் தேதி வரை 3040 பேரிடம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இரண்டாம் கட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் டி.டி.வி தினகரனே அதிக வாக்குகள் பெற்றுள்ளார். மேலும், சின்னத்திற்கான மதிப்பீட்டிலும் குக்கர் சின்னத்திற்கான வேட்பாளரையே எளிதில் அடையாளம் காண முடிவதாக தெரிவித்து உள்ளார்கள் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் கடந்த முறை(91.6) கருத்துக்கணிப்பில் கிடைத்ததை விட டி.டி.வி தினகரன் இந்த முறை (97.4) அதிக புள்ளிகள் பெற்று உள்ளார்.
தினகரனின் குக்கர் சின்னத்திற்கு அடுத்தபடியாக இரட்டை இலை 95.4 புள்ளிகளும் , உதயசூரியன் 94.6 புள்ளிகளும் பெற்று உள்ளது. இன்று வாக்களித்தால் கூட யார் ஜெயிக்க முடியும் என்கிற கேள்விக்கும் தினகரனே அதிக புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இந்த கேள்விக்கு டி.டி.வி தினகரன் 37.4 புள்ளிகளும், மருது கணேஷ் 24.3 புள்ளிகளும், மதுசூதனன் 22.1 புள்ளிகளும் பெற்று உள்ளனர். நோட்டா 3 புள்ளிகளும், யாருக்கு வாக்களிப்பது என்கிற பதிலுக்கு 7 புள்ளிகளும்
கிடைத்து உள்ளன. தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகி வந்தாலும், டி.டி.வி தினகரனுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து இருப்பது மீண்டும் பெரிய கட்சிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்து உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications