தினகரன் இனி தனி ஒருவன் இல்லை... கூடிய கூட்டத்தை பாத்தீங்களா?

முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்களை எதிர்த்தும் மன்னார்குடி வகையறாக்களை எதிர்த்தும் தனி ஆவர்த்தனம் நடத்திய டிடிவி தினகரன் இனி தனி ஒருவன் இல்லை. மேலூரில் கூடிய கூட்டம் இதை உணர்த்திவிட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தினகரன் கூட்டத்தில் விண்ணைப்பிளந்த தொண்டர்களின் ஆரவாரம்- வீடியோ

    மதுரை: மேலூரில் தினகரனுக்கு கூடிய கூட்டம் தானா சேர்ந்த கூட்டமா? கூட்டப்பட்ட கூட்டமா என்ற கேள்விகள் எழுந்தாலும், இனி தினகரன் தனி ஒருவன் இல்லை அமமுக அமைப்பின் தலைவர் என்று உணர்த்தியுள்ளது.

    ஜெயலலிதா இறந்து 15 மாதங்கள் கடந்து விட்டன. தமிழகத்தில என்னென்னவோ நடந்து விட்டது. சசிகலா ஜெயிலில் இருந்தாலும் மன்னார்குடி வகையறாக்கள் ஆள் ஆளுக்கு தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றனர்.

    இளவரசியின் வாரிசுகள் ஒருபக்கம் செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனது மகன் ஜெயானந்தை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

    மன்னார்குடி வகையறா எம்எல்ஏ

    மன்னார்குடி வகையறா எம்எல்ஏ

    டிடிவி தினகரன் தனக்கென ஒரு அணியை வைத்து ஆர்.கே. நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். மன்னார்குடி பரம்பரையில் ஒரு எம்எல்ஏ என்று அவர்களின் வகையறாக்களே சந்தோசப்பட்டதாக தெரியவில்லை.

    ஒதுக்கிய முதல்வர்

    ஒதுக்கிய முதல்வர்

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை டிடிவி தினகரன் சொன்னதைத்தான் முதல்வர், அமைச்சர்கள் கேட்டு வந்தனர். இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கு தினகரன் மீது பாயவே ஒரேடியாக ஒதுக்கி விட்டனர். தினகரனை வழிப்போக்கர் என்று ஜெயக்குமார் கூட, ஒ எஸ் மணியனோ காலாவதியானவர் தினகரன் என்று பேட்டி தட்டுகிறார்.

    18 பேர் தகுதி நீக்கம்

    18 பேர் தகுதி நீக்கம்

    டிடிவி தினகரனை நம்பிப்போன 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்த பின்னர் துணை முதல்வரானார் ஓபிஎஸ். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று டிடிவி தினகரன் முதன் முறையாக மதுரையில் கூட்டம் போட்டார். அப்போது கூடிய கூட்டம் அசரடித்தது.

    உள்ளடியை சமாளிக்கும் தினகரன்

    உள்ளடியை சமாளிக்கும் தினகரன்

    டிடிவி தினகரனுக்கு ஒரு பக்கம் அரசியல் ரீதியான குடைச்சல்கள் இருந்தாலும் மன்னார்குடி குடும்பத்தினர் திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, மச்சினர் வெங்கடேஷ், ஜெயானந்த், என குடைச்சல் கொடுக்க பலர் இருக்கிறார்கள். இதை சமாளிக்கவே தனக்கு ஒரு அமைப்பு வேண்டும் என்று நினைத்திருக்கலாம் டிடிவி தினகரன்.

    ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிகள் இணைந்தது போல தனது அணியும் அதிமுக உடன் இணையும் என்ற நம்பிக்கை டிடிவி தினகரனின் ஒவ்வொரு செல்லிலும் பரவியுள்ளது. எனவேதான் இன்றைய கூட்டத்தில் கூட அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்றுவதே தமது பணி என்று கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஆட்சியமைக்கும் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார் தினகரன்.

    மாஸ் காட்டிய தினகரன்

    மாஸ் காட்டிய தினகரன்

    சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது டிடிவி தினகரன் தனது அமைப்பின் பெயரை அறிவிக்க அதே நாள் நேரத்தை தேர்ந்தெடுத்தார். 18 எம்எல்ஏக்கள் மட்டும்தான் தினகரன் பின்னால் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் லட்சக்கணக்கானோரை கூட்டி வந்து மாஸ் காட்டி விட்டார். இது முதல்வர், அமைச்சர்களுக்கு மட்டுமல்ல மன்னார்குடி சொந்தங்களுக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    தலைவன் இருக்கிறான்

    தலைவன் இருக்கிறான்

    சசிகலா ஆசியுடன், ஆதரவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்திருக்கிறோம் என்று டிடிவி தினகரன் சொன்னாலும் ஒன் அன் ஒன்லி தலைவர் டிடிவி தினகரன்தான். தளபதிகள் செந்தில் பாலாஜி, தங்க தமிழ் செல்வன், வெற்றி வேல் உள்ளிட்ட 18 பேரும்தான். ஒருவேளை அதிமுக உடன் அமமுக இணைந்தாலும் தினகரன் மட்டுமே முக்கிய பதவியை பெற்றுக்கொள்வார். அவருக்கு யாரும் குடைச்சல் தரமுடியாது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+