For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்தது பிசினஸ்க்காகதான்.. சொல்கிறார் டிடிவி தினகரன்

ஈபிஎஸும் ஓபிஎஸும் இணைந்தது வணிகரீதியில்தான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஈபிஎஸும் ஓபிஎஸும் இணைந்தது வணிகரீதியில்தான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா பரோலில் வந்து சென்றபின் டிடிவி தினகரன் செய்தியாளர்களை அதிகம் சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உளப்பூர்வமாக இணையவில்லை என்றார்.

TTV Dinakaran said there is a chance for contest again in the by-elections

அவர்கள் இருவரும் இணைந்தது வணிகரீதியிலாகதான் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

அதிமுக 46-வது ஆண்டு விழாவை ராமநாதபுரத்தில் கொண்டாடுமாறு சசிகலா கூறியிருந்தார் என்றும் டி.டி.வி தினகரன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் வாழ்ந்த இடத்தில அதிமுக விழா கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்பட 12 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சியில் கந்து வட்டியை கடுமையாக எதிர்த்தார் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பதவியை காப்பாற்றினால் போதும் என நினைக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இப்போதுள்ள ஆட்சியாளர்களிடம் நீதி, நேர்மையை எதிர்ப்பார்க்க முடியாது என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

English summary
TTV Dinakaran said there is a chance for contest again in the by-elections. EPS and OPS joint for business he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X