For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 நிமிடமே நடந்த தூத்துக்குடி மாநாகராட்சி கூட்டம்.. 11 தீர்மானம் நிறைவேற்றம்... திமுக கவுன்சிலர்கள்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக அவசரம் அவசரமாக 10 நிமிடத்திற்குள் நடந்த முடிந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சியின் அவசரக்கூட்டம் இன்று மேயர் சசிகலா புஷ்பா தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் மதுமதி, துணைமேயர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியவுடன், மேயர் சசிகலாபுஷ்பா இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகமீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

அதனையடுத்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்தநேரத்தில் திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சனை அளவுக்கு அதிகமான அளவில் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தீர்ப்பதற்கு மேயர் தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்று சுகாதாரப்பணிகளும் சரிவர நடக்கவில்லை.

46வது வார்டில் கட்டிமுடிக்கப்பட்ட நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. மொத்தத்தில் மாநகராட்சி நிர்வாகம் முறையாக செயல்படவில்லை எனவே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறிய திமுக கவுன்சிலர்கள் கொறடா கோட்டுராஜா தலைமையில் கோஷமிட்டவாறு கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

அதேசமயம் மேயருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். அதனைத்தொடர்ந்து பூங்கா அமைத்தல், வடிகால் அமைக்கும் பணிகள், மாநகராட்சியில் காலியாவுள்ள 91பணியிடங்களை நிரப்புதல், மாநகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிப்பது என்பது உட்பட 11தீர்மானங்கள் 10நிமிடத்திற்குள் நடந்து முடிந்த அவசரக் கூட்டத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது.

திமுக கவுன்சிலர்களின் வெளிநடப்பாலும், அதிமுக கவுன்சிலர்களின் ஆதரவு கோஷத்தாலும் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது. தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை சாதாரண கூட்டம் ஆனாலும் சரி, அவசரக் கூட்டமானாலும் சரி அக்கூட்டம் சாரசரியாக 10 நிமிட நேரத்திற்குள் நடந்து முடிந்து விடுவது வழக்கமாகி விட்டது.. அதைக் காண்பது மக்களுக்கும் பழகிப் போய் விட்டது.

English summary
Tuticorin corporation council meeting ended in 10 mins today as the DMK councillors staged walkout over various charges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X