தூத்துக்குடியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளத்தில் சிக்கிய மக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து விட்டு விட்டு பெய்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில வெள்ள நீர் புகுந்தது.

வெள்ள நீர் பெருககெடுதது ஓடுவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியவில்லை. எட்டயபுரம் ரோட்டிலுள்ள ஆதிபராசக்தி நகர், முத்தம்மாள் காலனி, ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு சென்று அங்கு தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். ஆதிபராசக்தி நகரில் வெள்ள நீர் தங்கள் பகுதியில் நுழைந்து விட கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டததில் குதித்தனர். மேலும் ஏற்கனவே இருக்கும் வெள்ள நீரை விரைந்து வெளியேற்றக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
ஆதிபராசக்தி நகரில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தீயணைப்பு வீரரகள் கயிறு மூலம் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர். மேலும் ரயில் நிலையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு சித்த மருத்துவமனை, பழைய மாநகராட்சி அலுவலகம் உள்பட பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மரங்களும், மின் கம்பங்களும் திடீரென சாய்ந்ததால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களும், கார்களும சேதம் அடைந்தன. வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் சண்முகநாதன், கலெக்டர் ரவிக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications