வெள்ளத்தில் தவிக்கும் தூத்துக்குடி: கலெக்டர் காரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர் சரியாக கிடைக்காததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக வில்லசேரி குளம் உடைந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் கீழ் தளத்தில் தண்ணீர் புகுந்துள்ளது.

ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, மாணவர்களின் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தும் வெள்ளநீரில் சேதம் அடைந்துள்ளது. பொதுமக்கள் கீழே வர முடியாமல் மேல் மாடியில் சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர். கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க முடியாததால் பலர் உணவுக்காக ஏங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை மாலையில் நான்கு வழிச்சாலையில் கலெக்டர் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் பலன் இல்லாததால் அவர்கள் சோர்ந்து போய் காணப்படுகின்றனர். இந்த வெள்ளத்திற்கு அரசு அலுவலகங்களும் தப்பவில்லை.
அரசு அலுவலக கோப்புகள், கம்யூட்டர்கள், மேஜை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் கடல் போல் காட்சி அளித்து வருகிறது. நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications