ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 44வது நாளாக போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 44வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக த்துக்குடி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 44வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராம மக்களுக்கு ஆதரவாக அரசு தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 44வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளை உடனே நிறுத்த வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையினை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் காமராஜ் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து ஆர்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிகளுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையினை மூட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்பாட்டம் மற்றும் பொதுகூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுவந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து தூத்துக்குடியில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எவ்வித அரசியல் கலப்பும் இல்லாமல் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்த சம்பவம் தமிழக அளவில் ஸ்டெர்லைட்டு எதிராக குரல் எழும்பியுள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளுக்காக முதல்முதலாக குரல் எழுப்பிய குமாரரெட்டியாபுரம் கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் இன்று 44வது நாளாக தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளுக்கு மத்திய மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியும் தற்போது செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையினை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி பள்ளி பயிலும்மாணவர்கள் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டம் நடத்தினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications