ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்ச் 24ம் தேதி தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்ச் 24 ஆம் தேதி போராட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்ச் 24 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை அனுமதியுடன் இந்த போராட்டம் நடக்க உள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கான முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் முதல் பலகட்டங்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மார்ச் 17ம் தேதி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை கிருஷ்ணமூர்த்தி நாடினார். மார்ச் 24ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த கிருஷ்ணமூர்த்தி கோரியிருந்ததற்கு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications