இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்று தாயும் தற்கொலை – தூத்துக்குடி பரிதாபம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பெண் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் பிச்சையா. ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும், திரிஷா , அஜிதா என்ற 2 குழந்தைகளும் இருந்தனர்.
சொந்த ஊருக்கு பயணம்:
2 குழந்தைகளும் வெளியூரில் உள்ள பள்ளியில் விடுதியில் படித்து வருகின்றனர். நேற்று பாண்டியம்மாள் தனது 2 குழந்தைகளையும் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்.
கழுத்தை நெரித்துக் கொலை:
இந்நிலையில் இன்று காலை பாண்டியம்மாள் தனது குழந்தைகளை அப்பகுதியில் உள்ள மடத்துப்பட்டி ஊரணி பகுதிக்கு அழைத்து சென்றார். திடீரென பாண்டியம்மாள் பெற்ற குழந்தைகள் என பாராமல் 2 பேரையும் சேலையால் கழுத்தை நெரித்து கொன்றார்.
தூக்குப் போட்டு தற்கொலை:
பின்னர் சிறிது நேரத்தில் பாண்டியம்மாள் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போலீசாருக்குத் தகவல்:
2 குழந்தைகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டும், அருகே தாய் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மருத்துவப் பரிசோதனை:
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் போலீசார்:
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications