For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அழைத்தால் தினகரன் நிச்சயம் பங்கேற்பார்.. சொல்கிறார தங்க தமிழ்ச்செல்வன்!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் டிடிவி தினகரன் நிச்சயம் கலந்துகொள்வார் என எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் டிடிவி தினகரன் நிச்சயம் கலந்துகொள்வார் என எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தங்க தமிழ்ச்செல்வனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்து முதல்வர் தான் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மதுரையில் இன்று தொடங்கியுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் பல நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

TV Dinakaran will participate in the MGR century ceremony if he invited: Thanga tamilselvan

இந்நிலையில் மதுரை ஆண்டிப்பட்டியில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் அதிமுக எம்எல்ஏவுமான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எம்ஜிஆர் நூற்றாண் விழாவில் பங்கேற்க டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றார்.

TV Dinakaran will participate in the MGR century ceremony if he invited: Thanga tamilselvan

அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தங்க தமிழ்ச்செல்வன் அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்து முதல்வர் தான் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எடப்பாடி தலைமையிலான அணியினர் தினகரனை ஒதுக்கி வைத்துள்ளனர். இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு கூட டிடிவி தினகரனுக்கு எடப்படி தரப்பு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The MLA Thanga Tamilselvan meets press today in madurai. He said that TTV Dinakaran will participate in the MGR century cermoney if he invited. He also said that the chief minister should explain whether TTV Dinakaran called.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X